வணக்கம் அனைவருக்கும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது: அன்றே மறப்பது நன்று.!!! என்ற திருவள்ளுவரின் கூற்றுக்கிணங்க, எங்களுடைய நிகழ்வுக்கு வருகைதந்த நான்கு மதகுருமார்கள் அவர்களுக்கும், கிராமஅலுவலர்களுக்கும், எங்களுடைய ஆசான்கள் அவர்களுக்கும், காவல்துறைத் தலைவர், விழாவை சிறப்பிக்க வருகைதந்த அன்பு உள்ளங்களுக்கும், நயினாதீவு இளையோர் கழகம் கனடா உறுப்பினர்களுக்கும், நாங்கள் யாரையாவது குறிப்பிட தவறவிட்டிருந்தால் அவர்களுக்கும், எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த விழாவுக்கு வருகைதந்த அனைவரும், இலங்கையின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக எங்களுடன் ஒத்தாசையாக இணைந்து இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த நற்பணிக்கு நிதிப்பங்களிப்பை வழங்கிய வர்களுக்கும், வாகன வசதிகள்,பந்தல் அமைத்தல், ஒலிபெருக்கி, உணவு, குளிர்பானம், கட்டடக் கலைஞர்கள், எங்களுடைய விழாவுக்கு இலவசமாக புகைப்படத்தை எடுத்துதந்த அன்பு நண்பனுக்கும் சிறப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி வணக்கம்!!!
யாதும் ஊரே; யாவரும் கேளிர்.